உணர்தல்கள்

சத்தம்
கேட்டு விடாதவாறு
சர்வ ஜாக்கிரதையாய்
ஸ்டாண்ட் போட்டு
சைக்கிள் நிறுத்தி
தலையிலடித்துத்
தாமதம் நொந்து
அப்பா
தூங்கியிருக்க வேண்டுமென
கடவுளைப்
பிரார்த்தித்துக் கொண்டு
அம்மாவுக்கு மட்டும்
கேட்கும்படி
கதவு தட்டிவிட
மகன்களால்
முடிகிறது
தனக்கு மட்டுமேயான
கதவு தட்டல்களைக்
கச்சிதமாய்க்
கேட்டுக்கொண்டு விட
அம்மாக்களால்
முடிகிறது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (3-Jul-15, 9:46 pm)
பார்வை : 236

மேலே