காதல் கவிதை 1941
பெண்ணே உன் அழகென்னும் ஆங்கிலேயன் பிடியில் அடிமையாய் இருக்கும் இந்தியா நான்..என் உறக்கத்தை கெடுக்கும் உன் நினைவுகள் என்னும் சர்வாதிகாரம்..
உன் பார்வை சிறைக்குள் அடைக்கப்பட்ட நான் எழுதும் முதல் சிறைக்காவியம் இந்த காதல் கவிதை ...எனக்கு உன் சம்மதம் என்னும் சுகந்திரத்தை நீ தந்தே ஆகவேண்டும்...
தவிர்க்க முடியாது உன்னால் உன் காதலன் என்ற உரிமையில் அதை பெறுவது என் கடமையாகும்..
அதுவரை தொடரும் என் அகிம்சை என்னும் காதல் போராட்டம்..

