மலராத மொட்டு

பூவொன்று பூவாகி
பூவிற்குள் கருவாகி
பூ பூக்க இருந்த..அந்த
புனித நன்னாளில் ..

வண்டொன்று வக்கிரமாய்
வசை பாடி இசை பாடி
பூ வேண்டாம் எனக்கு..
புதிய வண்டே வேண்டும் என...

பாவம் அந்தப் பூ..
பரிதவித்து போயிற்ரு..
வண்டின் வக்கிரத்தால் ..
வர்ணம் களைந்து குலைந்திற்று .

மோசமான அந்த வண்டில்
பாசம் எதுவும் இருக்கவில்லை..
வேஷம் அறியா அம் மலரால் .
வேறு கூற முடியவில்லை.

மலர்கள் உதிர்ந்தன..
மண்ணுடன் சருகாகின
மலராத மொட்டு ஒன்றும் ..கருவில்
மடிந்தே இறந்ததுவே...

பிரியமான பிரியா

எழுதியவர் : திருமதி .பிரியா. கருணாகரன் (4-Jul-15, 12:21 am)
Tanglish : malaraatha mottu
பார்வை : 173

மேலே