முடிவெடுங்கள்
இருள் சுழ்ந்து கிடக்கிறது மக்களின் வாழ்க்கை,
பிரகாசமாக உள்ளது, இவ்வார்த்தை சொன்ன அரசியல்வாதிகளின் வாழ்க்கை,
எங்கள் ஆட்சி பொற்காலமாக அமையும், தெரியும்
உங்களுக்கு பொற்காலம், எங்களுக்கு கற்காலமென்று,
இலவசங்களை வழங்கி உங்கள் குறைத் தீர்ப்போம்,
எதற்கு மக்களையும் வீ ணர்களாக்கி அழிக்கவா?
லஞ்சத்தை ஒழிப்போம் என்றீர்கள்,
ஒழியாது, கொடுப்பது நீங்களாக இருக்கும் வரை,
விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும்,
உயர்ந்தது, அவர்களின் இறப்பு விகிதம்,
எங்களுடையது மக்களாட்சி,
சரிதான், உங்களுடைய மனைவி மக்கள் ஆட்சி என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறீகள்,
அனைவருக்கும் கல்வி- கல்விதுறையோ தனியாரிடம்
அனைவருக்கும் மது- டாஸ்மாக் துறையோ அரசிடம்,
என்னவொரு உயர்ந்த நோக்கம்,
முடிவெடுங்கள், இனி கிடையாது
பணத்திற்கும், இலவசத்திற்கும் இசையாத நம்மை போன்ற ஒவ்வொருவரின் வாக்கும் ஏமாற்றும் கட்சிகளுக்கு இல்லையென.
ஆர் .கே. விமல்ராஜ் மாதவரம்