பாவம் தீருமே

கந்தன் நாமம் சொல்லச் சொல்ல
****கண்ணீர் பொங்குதே !
வந்த துன்பம் மெல்ல மெல்ல
****மாறிப் போனதே !
சந்தத் தோடு பாடப் பாட
****சக்தி கூடுதே !
நொந்த வுள்ளம் சோர்வு நீங்க
****நோன்பும் நோற்குதே !

செந்தில் வேலன் தாளைப் பற்ற
****தெம்பும் கூடுமே !
சொந்த மென்று தாங்கி நின்று
****தொல்லை போக்குமே !
எந்த நாளும் கந்த வேளை
****எண்ணி வேண்டினால்
பந்த பாசம் பற்று நீங்கி
****பாவம் தீருமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Jul-15, 9:05 pm)
Tanglish : paavam theerumae
பார்வை : 90

மேலே