பிரியாதே எந்தன் அன்பே
உன் வார்த்தை கேட்பது சுகமே
எனக்காக பேசிடு தினமே
எதை மறந்தாலும் உனை மறவேனே
என் சிதை எரியும் நாள்வரை நானே
நான் உனக்காக பிறந்தேனென்று
ஒரு வார்த்தை சொல்லிடு இன்று
அன்பிற்கு முகவாி இல்லை
அதுதானே ஆண்டவன் பிள்ளை
யார்மூலம் வலி வந்தாலும்
உன் விழிதானே உனக்காய் அழுமே
உன் விழியாவேன் நானே அன்பே
சிறு மொழிபேசு எந்தன் முன்பே