ரசிப்போம் தமிழை
நம்ம மொழி செம்மொழி
அம்மா.... மூன்றெழுத்து
அப்பா......மூன்றெழுத்து
தாத்தா..... "......."
பாட்டி..... "........"
தம்பி...... .."....."....
தங்கை...... "....."
மகன்...... "......."
மகள்....... "......."
காதலி..... "......"
அக்கா .... "......"
மனைவி....."....."
இவையனைத்தும் அடங்கிய ' உறவு' மூன்றெழுத்து...
உறவில் மேம்படும் 'பாசம்' மூன்றெழுத்து...
பாசத்தினால் விளையும் ' அன்பு'
மூன்றெழுத்து....
அன்பின் மிகுதியால் 'காதல்' 'வெற்றி' 'தோல்வி' மூன்றெழுத்து...
காதல் தரும் வலியால் வரும் 'வேதனை'
இதன் உச்சத்தில் வரும் ' சாதல்' 'உயிர்' மூன்றெழுத்து....
இது நான் எழுதிய 'கவிதை 'என்றால் அதுவும் மூன்றெழுத்து...
அந்த கவிதைக்கு கருத்து நீங்கள் 'அருமை ' என இடுவதால் அதுவும் மூன்றெழுத்து...
அதற்கு பதில் 'மொக்கை' என கருத்திட்டால் அதுவும் மூன்றெழுத்து..
அதற்கு நாங்கள் 'கவலை' பட்டால் அதுவும் மூன்றெழுத்து....
இத்தனையையும் ' நட்பு' என்ற மூன்றெழுத்தில் இணைந்து,
அனைவருக்கும் 'நன்றி' என்று நாங்கள் பதிலாக இடுவதும் மூன்றெழுத்து....
இவையனைத்தும் அடங்கிய 'தமிழ்'
'வாழ்க' என வாழ்த்தி' விடை' பெறுவதும்
நம் செம்மொழி 'தமிழே'