உழைப்புக்கான விண்ணப்பம்
மூதாதையர் கரங்களில்
கொண்டதை
நாங்கள் கனவுகளில்
கொண்டுள்ளோம்
அவர்களின் காயங்களின்
விலை மறுப்பு
எங்கள் கற்பனையின்
கலை -மீட்பு
நீ இயற்கைக்கும் சேர்ந்து
வாழ்ந்தாய்
நான் இயற்கையும் சேருமாயென
வாழ்கிறேன்
சிந்தனைக்கொண்டு
படைத்ததை
காகிதம் கொண்டு
விண்ணபித்தோம்
காகிதம் நிறமாறும்
என் உருமாறும்
என்றே?