வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்

யுகம் அழிகையில்
ஆகாயம் வெடித்து
தாரகைகள் சிதறி..,
சமுத்திரங்கள் அகற்றப்பட்டு
சமாதிகளும் திறக்கப்பட்டால்...,
காட்சிகளை கண் மூடி
சிந்தித்துப்பார் இதயம் நின்று விடும்.

லட்சக்கணக்கான விந்துமுட்டைகளில்
சூளோடு ஒன்றைத்தான் புகுத்தி
சதைக்கட்டி வடிவில் கருவில் ஒட்டுண்ணியாய்
ஒட்டிய மனிதனுக்கு அழகான
அவயங்களை கொடுத்தவன்
கடவுள் என்பதை மறுப்பவன் உலகில் யார்?

உன் மதியை செதுக்கிய இறைவனை
மறக்கச்செய்தது கானல் நீர் பூமியா?
கண்களால் கெட்டதை பார்க்காதே...!!!
வேதம் ஈரிரு தந்து விபரீதம் சொல்லப்பட்டது.

பாவத்தின் தாகம் மனதில் மோகத்தை
ஏற்படுத்தி உன்னை பாவியாக்கி விடுமென்பதை
அறிந்தும் நாகரிக மனிதன் அநாகரிகமாய்
உணராமை ஏன்? எண்ணற்ற உள்ளங்களே..!!!
சற்று ஆழமாய் சிந்தித்துக் கொள்க....!!!!!!!!!!!!

கோடிகள் சேர்த்தாலும் நீ பல கோடி
ஆண்டுகள் நிலைக்க ஆயுளை
விலை கொடுத்து வாங்கமுடியாது.
கருவில் தவழ்ந்து தெருவில் முடியும்
வாழ்வு சொற்பம்.ஆனால் மறுமை நிரந்தரம்.

ஆத்மாக்கள் புரிந்த குன்றிமணியளவான
நன்மையும் அவனுக்கு கிடைப்பதைப்
போல பாவங்களும் உனக்கே சொந்தம்.
இரு புயங்களிலும் கடவுளின் தூதுவர்களான
தலைசிறந்த எழுத்தாளர்கள் உள்ளனர்.
மிகவும் நேர்மை மிக்கவர்கள்.துரோகம்
என்ற வார்த்தை மனிதனுக்கே சொந்தம்,

பாவியாய் இறந்து விடாதே!!!!!
கல்லறை உன்னை தாங்க வெறுத்து நெருக்கும்.
நாகிரக வாழ்க்கை வெறும் பாவத்தின் சூட்சேமம்
ஆன்மீக வாழ்க்கை இரு உலகினதும் வெற்றிக்கொடி,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Jul-15, 12:01 am)
பார்வை : 167

மேலே