பொய் தவிர வேறொன்றும் இல்லை
நான்
காதலைப் பற்றி
எழுதுவதெல்லாம் பொய்
பொய் தவிர வேறொன்றும் இல்லை
நம்பாதீர்கள் !
இதற்கு கவிதை மொழியில்
கற்பனை என்று பேர்
மனச் சாளரத்தை மட்டும்
திறந்து வையுங்கள்
தென்றலாய் வீசிச் செல்லும் !
----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
