நட்பு, காதல்- கற்றது


நட்பின் இனிமையை பிரிவில் கற்றேன்!

காதலின் இனிமையை அணைப்பில் கற்றேன் !

அன்பின் ஆழத்தை காதலில் கற்றேன் !

சுயநலத்தை போலி நட்பில் கற்றேன் !

உயிரை தரும் தியாகத்தை உண்மை நட்பில்

கற்றேன் !

நீயே நான் , நானே நீ எனும் மந்திரத்தை

காதலியிடம் கற்றேன் !

எனக்கு எதிராக போட்டி போட்டு என்னையே தோற்கடிக்கும் வஞ்சகனே என் நண்பன் என கற்றேன்!

காதலியின் கணவனை அவளுடன் பார்த்த போது

காதலின் துரோகத்தை கற்றேன் !!

உண்மையான நேசம் பாசம் அனைத்தையும் என்

மனைவியின் காதலில் கற்றேன்!!

இறுதியில் நட்பு காதல் இரண்டிலும் எது உண்மை

எது பொய் என கற்றேன்!!


போதுமடா போதும்! பொல்லாத உலகம் டா !!

எழுதியவர் : Nithi (15-May-11, 12:31 pm)
பார்வை : 772

மேலே