தந்தையின் பாசம்

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொல்கிறார்
" என் கையை கெட்டியமாக பிடித்துக் கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம் மா " என்று.
உடனே,மகள் சொல்கிறாள் அப்பனா "நீங்க என் கைய புடிச்சிகிங்க பா".
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.
நான் உங்கள் கையை பிடித்தால்,
ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் பா என்றாள் மகள்.
உண்மை அன்பு எங்கோ, அளவு கடந்த நம்பிக்கையும் அங்கே..

எழுதியவர் : பிதொஸ் கான் (6-Jul-15, 1:21 pm)
Tanglish : thanthaiyean paasam
பார்வை : 265

மேலே