என் கை பட்ட பின்னும் நிரம்பி வழிகிறது

வீட்டுக் கழிவறைத் தொட்டியைச்
சுத்தம் செய்த பின்
என் தாகத்திற்காக வந்திருந்த
தண்ணீா் குவளையையும்,
என் கூலி போகத் திருப்பித் தந்த
மீதப் பணத்தையும்
என் கைபட்டதால், புற வாசலில்
வைத்து விட்டுப் போகச் சொன்னார்கள்...
அவைகள் வீடுபேறு அடைய முடியாமல்
அங்கேயே கிடக்கின்றன...
ஆனாலும், என் கை பட்ட பின்னும்
நிரம்பி வழிகிறது கழிவறைத் தொட்டி...!

எழுதியவர் : பட்டினத்தார் (6-Jul-15, 1:39 pm)
பார்வை : 88

மேலே