சங்கடச் சந்திப்பில்

சங்கடச் சந்திப்பில்.........
எதிர்பாராச் சந்திப்பில்
சங்கடத்தை கூடவேயழைத்து
நலம் விசாரிப்பவளின்
இளக்காரப் பார்வை விலக்கி
அகன்றிருந்த தனங்கள் தாண்டி
புடவை மூடிய மேட்டுப் பகுதியில்
குத்திட்ட விழிகளுக்கு
புத்திமதி சொல்கிறது
அடிக்கடி அடி வாங்கி
காயப்பட்ட அலுமினியப் பாத்திர மனம்
ஆறைந்து அகவைகளாகியும்
அடி வயிறு திறக்காத
மலடியின் கொள்ளிக்கண் பட்டு
மகவுக்கேதுமாகி விடுமோவென
எதிராளி எண்ணுவதாகவே ...........

எழுதியவர் : வளர்மதி சிவா (6-Jul-15, 2:50 pm)
பார்வை : 54

மேலே