இதோ வந்து விடாதோ

மெலிந்த மேனி
சதை இல்லாத் தோலில்
எலும்பு தெரியும் உடல்
வறுமையின் வரிகள் எழுதிய
முகச் சுருக்கக் கவிதை
குழி விழுந்து பூளை சாடிய கண்கள்
பல் இழந்து வெறும் வாய் மெல்லும்
பொக்கை வாய்
ஒட்டிய வயிறு
இடையில் அம்மணத்தை மறைக்க
சுற்றிக் கிடந்தது ஓர் கந்தல் ஆடை
உறங்கவும் முடியவில்லை
ஓயவும் முடியவில்லை
வாழவும் வழியில்லை
வயோதிகத்தின் பரிதாபமாய்
தெருவோரச் சுவரில் சாய்ந்து கிடக்கும்
இவன்......
எத்தனை சுதந்திர தினங்கள்
இவனை பார்த்து கடந்து சென்றிருக்கும் !!!
இன்னொரு விடியலுக்காக இவன் காத்திருக்கவில்லை
இதோ வந்துவிடாதோ என்று காத்திருக்கிறான் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Jul-15, 4:15 pm)
பார்வை : 62

மேலே