நீல மேகங்கள்

தனிமையில் இனிமை
காண முடியுமா ?
நீல மேகங்களே ...!!
கொஞ்சம் நில்லுங்கள் .
காதலனாம் கருமை
மேகங்கள் .... காத்து
நிற்கிறோம் உங்களுக்காகவே ...!
நாங்கள் வரும்வரை
காத்திருங்கள் ....
இரண்டறக் கலந்து
வான் மேகமாகி
மழைக் குழந்தையை
பூமிக்குத் தந்திடுவோம் .