இன்று ஒரு நாள் மட்டும்
என்றோ ஓர் நாள்!!!!
முடியும் வாழ்க்கை
இன்று ஓர் நாள்- மட்டும்
உன்னுடன் தொடங்காதா...........
என்றோ ஓர் நாள்!!!!
நிற்கும் கால்கள்
இன்று ஓர் நாள்- மட்டும்
உன்னுடன் பயணிக்காதா.......
என்றோ ஓர் நாள்!!!!
உட் புகா சுவாசம்
இன்று ஓர் நாள்- மட்டும்
உன் சுவாசத்தை சுவாசிக்காதா!!!!!!
என்றோ ஓர் நாள்!!!!
வரையா கைகள்
இன்று ஓர் நாள்- மட்டும்
உன் உருவம் வரையாதா!!!!
என்றோ ஓர் நாள்!!!!
இமைக்கா கண்கள்
இன்று ஓர் நாள்- மட்டும்
உன் உருவத்தை சிமிட்டாதா.........
-மூ.முத்துச்செல்வி