மதிமயக்கும் கோபம்

அறிவை மயக்கி நம்மை
அழிவில் தள்ளும் மாயை
நினைவை இழக்கச் செய்து
நிந்தனையில் மாட்டிவிடும்

ஒரு நொடிப்பொழுதில் தலைதூக்கும்
ஒப்பனை செய்யப்படாத கதாபாத்திரம்
தன்னிலை மறக்கச் செய்து-நம்
தன்மையை மாற்றிவிடும்

மது அருந்தாத போதும்
மனதில் ஏற்படும் போதை
மனசாட்சியை மழுங்கடிக்கும்
மயக்க உணர்வு கோபம்

சினம் தவிர்த்தால்-என்றும்
சிறந்த குணம் பெறுவோம்
ஆத்திரம் துறந்தால்
அன்பான வாழ்வு நமக்கென்றும்

எழுதியவர் : வேலணையூர் சசிவா (7-Jul-15, 3:01 am)
பார்வை : 128

மேலே