அடையாளம் காண்க ~~ அர்ஷத்

என்மீது ஏறி என்னை காயப்படுத்தினாலும் பரவாயில்லை
நீ காயப்பட்டு விடாதே ~ வேகத்தடை !!!

உன் கையை பிடித்தே வாழ்ந்துவிட்டேன்
இருந்தாலும் பரவாயில்லை பழகிய பிறகு
கைவிடுவதென்பது என் விஷயத்தில் மட்டும் சரி ~ சிகரெட் !!!

பிழையான தமிழ் - தமிழ் ஆசிரியருக்கும்
தமிழ் புலவனுக்கும் இல்லாத உரிமை
எனக்கு உண்டு ~ மழலை !!!

எதுவும் இல்லாதவர்களிடம்
நான் அதிகம் இருப்பேன் ~ பசி !!!

பாற்கடலில் ஆழ இருளில்
பயணிக்கும் துளிகள் ~ஆணின் கண்ணீர் !!!

நதிகளை சாக்கடையாக்கிய
அசுத்த மீன்கள் ~ போலி அரசியல்வாதிகள் !!!

வயிற்றில் கல்லைக்கட்டியும்
வயிற்றில் பாரமில்லை ~ மலடி தாய் !!!

எழுதியவர் : அர்ஷத் (7-Jul-15, 12:33 pm)
பார்வை : 124

மேலே