கடவுள்
அவர் தான்
அவரிடம் அதிகம் பேசி இருக்கிறேன்
அவரும் பேசி இருக்கிறார்
ஆனால் இன்று வரை
இருவரும் சந்தித்து கொண்டது இல்லை...
அவருக்காய் என் பேனா மை
கிறுக்கிய கவிதைகள் அநேகம்
ஆனால் இன்றும்
என் பேனா அலகுக்கு
அவர் விடியற்காலையில் பூத்த ரோஜா தான்...
முற்களும் பதம் பார்க்க
நினைத்த நெஞ்சம் எனது
ஆனால் அவர் மட்டும்
அதில் வசிக்க துடிப்பது ஏனோ...
யாரும் ரசிக்காத ஓவியம் நான்
ஆனால் அவர் மட்டும்
தன் உள்ளங்கையில் என்னை வரைந்து
நொடிக்கு நூறு முறை காண்பது ஏனோ...
யாரிடமும் என்னை விட்டு கொடுக்காத
ஒரு உயிர் அவர்...
அவர் தான் என் நம்பிக்கை...
(வேடிக்கையான ஒன்று)
நான் அழுதால்
அவர் படைத்த மேகமும்
தன் சட்டை பையில்
கருப்பு கொடியை குத்தி கொண்டு
மழையாய் கண்ணீர் விடும்...