காட்டுக்குதிரைகள்

உடல் எங்கும் உயிர் சிவப்புகள்
ரத்த கோரைகள்
அதிக திடத்துடன்
காட்டுக்குதிரை!

ஓடும் பிராணிக்கு
உயிர் கால்களில்!
கல்லென்ன முள் என்ன
கள்ளி சப்பாத்தி என்ன,
முட்புதர்கள் என்ன,

மிதித்து தாண்டி
உட்புகுந்து ஓட வேண்டும்!

தண்ணீர் இரை
தானே தேடி!
தன் இலக்குகளை
நோக்கி!

தண்ணீர் இரை
தானே வரும்
வாய் தேடி
போகும் இடம் புரியாது
வரும் இடம் தெரியாது

எஜமானின் இலக்கு நோக்கி
எஜமானின் சுமை தூக்கி
வீட்டு குதிரை!

பின்புலமில்லா
அனைவரும்
காட்டுக் குதிரைகளே!

எழுதியவர் : பொன்னரசு (7-Jul-15, 11:40 am)
பார்வை : 94

மேலே