சிட்டுக்குருவி
சிட்டுக்குருவிகளை
செல்போன் கோபுரங்கள்
துரத்தி அடித்ததாக
படித்து விட்டு
நண்பர்களிடம்
கவலையுடன் பகிர்ந்து கொண்டேன்
செல்போனில்!
நீண்ட நாட்களுக்கு பின்
மீண்டும் சிட்டுக்குருவி
என் வீட்டு ஜன்னலில்!
கை தட்டி
குதூகலித்தது குழந்தை!
கவலையுடன் பார்த்தேன்
செல்போனில் சிக்னலை!