நம்ம தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஏலே...மக்கா...இன்னைக்கு
நம்ம தோனிக்கு பொறந்தநாளு..

சிங்கம் போலே பிடரி வைத்து
செல்லமாய் டீமுக்குள்ள வந்தாரு..

சிக்குன பந்து எல்லாத்தையும்
சிக்ஸரு ஃபோரு வெளுத்தாரு...

திறமையத் தான் வெளிச்சம் போட்டு
டீமூ கேப்டன் ஆனாரு..

உள்ளூர்க் கோப்பை உலகக் கோப்பை
எல்லாம் வாங்கித் தந்தாரு..

எங்கோ ராஞ்சியில் பெறந்தாரு
நம்ம மெட்ராசு பையன் ஆனாரு...

மஞ்ச சொக்காய் ஷோக்கா போட்டு
பெரிய்ய்ய்ய்ய விசிலு அடிச்சாரு...

சுத்தி பத்தி எரிஞ்சாலும்
தில்லா கூலா நிப்பாரு...

கிரிக்கெட்ட விட்டுப் போனாலும்
எங்க ஹார்ட்டு பீட்டா துடிப்பாரு...

எங்க "தல தோனி" நீங்க
வாழனும் வாழனும் பல்லாண்டு...!!

ஏலே...மக்கா....இன்னைக்கு..
நம்ம தோனிக்கு பொறந்தநாளு....!!!

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (7-Jul-15, 10:27 am)
பார்வை : 1130

மேலே