இனிமே மாறட்டுமே

கவலைகள் விடு
காற்றில் பற!
குறைகளை விடு
கண்ணீர் மாற!

துன்பங்கள் விடு
தூரம் கட!
துயரங்கள் விடு
துணிவு ஏற!

சோகங்கள் விடு
சுகங்கள் வர!
சோர்வுகள் விடு
செல்வம் பெற!

இன்னல்கள் விடு
இன்பம் திற!
இம்சைகள் விடு
இனிமை பெற!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (7-Jul-15, 10:52 pm)
பார்வை : 193

மேலே