மழையே வா

மழையே வா
மழையே
வானத்திலிருந்து வரும் விலையில்லா
வெள்ளி துகள்களே - வா
மழையே
மரத்திலிருந்து வானம் சென்று
பூமிக்கு திரும்பும் புனித தீர்த்தமே - வா
மழையே
வானத்தின் கறைலிருந்து
பூமியின் கறையை கழுவும்
வேலைக்காரியே - வா
மழையே
ஒதுக்கி நின்றலும்
உன்னில் நனய தூண்டும்
ஒர வஞ்சனைகாரியே - வா
மழையே
பூமியின் திருமணத்தில்
நீ சிறப்பு விருந்தினர்
வா விருந்துக்கு - வா
மழையே
ஏய் வான தாயியே
உன் பூமி மகனுக்கு
பாலூட்ட - வா
மழையே
நீ என்ன அஃறினை
மனித இனம் தவிர
மற்ற இனத்திற்கு முன்னமே
உன் வருகை தெரிக்கிறது
என்றும்,
கமலக்கண்ணன்