வினாவுக் கென்ன விடை

மேல்வானில் மற்றெல்லா மேகங்கள் வீழ்ந்துவிட
நீல்மேகம் ஒன்றுமட்டும் நீந்துவதேன்?- நூல்போலும்
மூன்றாம் பிறையின் முகங்காண ஆவலும்
தோன்றிற்றோ மேகமே சொல் .
மேல்வானில் மற்றெல்லா மேகங்கள் வீழ்ந்துவிட
நீல்மேகம் ஒன்றுமட்டும் நீந்துவதேன்?- வால்நீண்ட
பட்டமொன்று வானில் பறப்பதைப் பார்த்ததும்
வெட்டச்சென் றிற்றோ விரைந்து .
மேல்வானில் மற்றெல்லா மேகங்கள் வீழ்ந்துவிட
நீல்மேகம் ஒன்றுமட்டும் நீந்துவதேன்?- பால்வண்ணப்
பூரணையின் பேரெழிலைப் போற்றிடச் சென்றதாம்
ஊரடங்கும் வேளை ஒளிந்து .
( முதல் இரு வரிகள் வினாவாக கவிவேழம் இலந்தையார் கேட்க மீதம் இருவரிகள் விடையாக நான் எழுதியது )