வைரங்கள்

பூக்கள் மலர்வது அவற்றிற்காக அல்ல
கனிகள் கனிவது மரத்திற்காக அல்ல
யாவும் நமக்காக, நிறுத்தாமல்!

பயனில்லை எனினும்
தன் வேலையை நிதமும் செய்கிறது அலை
நின்று ரசிப்பது நாம் தானே!

வீசும் தென்றலை தேடிப்பிடித்து பாராட்டவா செய்கிறோம்?
இல்லை.
அனுபவிப்பதோடு சரி.

பூ கனியை பார்த்தும்,
அலை தென்றலை பார்த்தும்
பொறாமை கொள்வதில்லை

அவை ஓயாமல் இயங்குகின்றன
துளியும் பயனும் பாராட்டும்
இல்லை என்ற போதும்.

இவற்றோடு நம்மை ஒப்பிட
முடியாதென்றா நினைக்கிறீர்கள்?
நினைவுகளை கேளுங்களேன்!

ஓய்வில்லாமல், பயனில்லாமல்,
பாரட்டில்லாமல், பொறமையில்லாமல்,
ஒரு நாளேனும் ஏதேனும் செய்திருப்போம்.
நாமும் கூட நல்லவர்கள்.......

விளம்பரப்படுத்துவதில்லை வைரம்
"இங்கே இருக்கிறேன்" என்று.
ஒன்றல்ல, பல இருக்கலாம்!

புதைந்திருக்கின்றன அவை
மண்ணில் மட்டுமல்ல,
மனதிலும் தான்!

படைத்தவன் வைத்து தான் அனுப்பியிருக்கிறான்
தேடுங்கள்!
கிடைப்பின் விற்று மட்டும் விடாதீர்கள்.
ஏனெனில் நாம் கெட்டவர்களும் கூட....

எழுதியவர் : (7-Jul-15, 12:55 pm)
பார்வை : 82

மேலே