மனிதனுக்காக நேரம்

இயற்கை முழுதும் காத்திருக்கிறது மனிதனுக்காக
ஆனால் நேரம் மட்டும் காத்திருப்பதில்லை
அது நம்மை விட்டு விட்டு ஓடிக் கொண்டே இருக்கிறது
அதற்கு மட்டும் அவசரம் ஏன்
இயந்திர வாழ்கையில் ஓடிக் கொண்டிருக்கும் நேரம்
நம்மிடம் இருந்து தப்பித்துக் கொள்கிறது
நாம் வாழும் ஒவ்வொரு மணித் துளியும் பொன்னானது
நாம் இயந்திரம் அல்ல
கடிகாரம் நம்மை வேடிக்கை பார்க்கிறது
மனிதன் படும் ஒவ்வொரு அவசரத்தையும்
தன்னை ஓட விட்டு பின் நேரம் போய் விட்டதே
என்று அங்கலாய்ப்பதையும் பார்த்து
நேரம் சிரிப்பதா/ அழுவதா/
தெரியாமல் தன் நேரத்தை நகர்த்தி கொள்கிறது
காலமும் நேரமும் பார்த்து
மனிதன் இன்னமும் திருந்தவில்லையே
எங்கே அவன் திருந்த நேரம் தான் விட்டு வைப்பதில்லையே
நேரம் வரும் போகும் அது இயற்கை
மனிதனுக்காக நேரமே தவிர, நேரத்திற்காக மனிதன் இல்லை
இது புரிந்துதான் மனிதன் வாழ்க்கையை நகர்த்துகிறான்
என்னதான் நேரம் ஓடினாலும் ஓடட்டும்
நாம் நிதானம் தவறாது செல்வோம்
நேரமே போனாலும் மீண்டும் நேரம் வரும்
ஒவ்வொரு நாளும் வரும் ஒவ்வொரு நேரமும் வரும் நமக்காக

எழுதியவர் : பாத்திமா மலர் (8-Jul-15, 9:08 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 98

மேலே