நீங்காத பாசக்கயிறு --முஹம்மத் ஸர்பான்

என் அம்மா ஊட்டிய சோற்றுக்கு
சுவை அதிகம் அதை விட என் தாய்
மேல் எனக்கு பாசம் அதிகம்.

உனக்கு வளையல்களும் தோடுகளும்
பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுக்க
ஆசைதான் இன்று உன் பிள்ளையால்
முடியாமல் போய் விட்டதே!!

பணம் மீது காதல் கரைகடந்து சென்றேன்,
உன்னை நினைக்க தவறிவிட்டேன்.செல்வமென்று
வெறும் காகிதங்கள் பெருகின.நான்
என் தாய் மடியில் அயர்ந்த தூக்கம் கிடைக்குமா???

நான் உன்னோடு இருந்திருந்தால்
கூலி வேலை செய்து கூட இன்பமாக
வாழ்ந்திருப்பேன்.இன்று உன் முகம்
காணாமல் துடிக்கின்றேன் நீ கல்லறை சென்றதால்....,

எனக்கு நீ பாடிய தாலாட்டை கேட்க
ஆசையாகவுள்ளது.உன் சேலையை
நினைவுகள் தூண்ட என் நெஞ்சில் அனைத்து
கதறி அழுவேன்.எம் குடிசையெல்லாம்
நீதான் அம்மா தெரிகிறாய்,

அம்மா நீ கல்லறையில் நிம்மதியாக தூங்கு
நான் தினமும் உன்னை வந்து பார்த்துக்கொள்வேன்,
என்னை நீ மடியில் தூங்க வைக்க ஆசைப்பட்டால்
என்னையும் கல்லறைக்கு அழைத்து விடு!!!
நானும் வருகிறேன்...................,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (7-Jul-15, 11:14 pm)
பார்வை : 127

மேலே