குப்பைத்தொட்டி குழந்தை
பேசுகிறாய் செவி சாய்க்கிறேன்
மந்திரமொழி புரியவில்லை -எனினும்
மகிழ்ந்து சிரித்து தூக்கி அணைக்கிறேன்
அழுகிறாய் அள்ளி எடுக்கிறேன்
அர்த்தம் புரியவில்லை உன் கண்ணீருக்கு
பரிதவிக்கிறேன் பாலுக்கு அழுகிறாய்யென்று
புட்டிப்பால் ஊட்டுகிறேன் இருந்தும்
நிற்கவில்லை உன் அழுகை
தொட்டிலில் போட்டு துயிலிசை பாடுகிறேன்
தூங்கவில்லை உன் கண்கள்
அள்ளி எடுத்து பாலுட்டியும் தாலாட்டியும்
நிற்கவில்லையே உன் அழுகை ஒலி
புரிந்துவிட்டதோ உனக்கு -நான்
உன் தாயில்லை என்பது
என்ன செய்வது உன் தயவளோ
குப்பைத்தொட்டிக்கு தத்து கொடுத்துவிட்டாள்-உன்னை
மழலை இல்லா எனக்கு-நீ
மாணிக்கம் அல்லவா