எனக்கு கவிதை தொியாது

எனது தாயின் இரத்தம் வெள்ளை நிறம் என்று நினைத்து அவள் மாா்பில் நான் முட்டும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
எனது தந்தையின் தோளில் நான் திருவிழா சென்று மிதித்த தோளை தடவிய போது...
...எனக்கு கவிதை தொியாது...
பள்ளியில் எனது குருவிடம் நான் வாங்கும் அடியில் எனது அறிவு வளா்வதை காணும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
தீா்ப்புகள் சொல்லும் இளமை பருவத்தில் அழகான பெண்களை காணும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
எனது மனைவி என்று அலுவலகத்தில் செய்யும் வேலையை முடித்து
இனிப்புடன் வீடு திரும்பும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
என் குழந்தை பிறக்கும் தருணம் மனைவியின் கையைப் பிடிக்கும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
குழந்தையைப் பள்ளியில் சோ்க்க அடுத்த இரவை கடன் வாங்கி வேலை செய்யும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
என் குழந்தையின் குழந்தையுடன்
விளையாடும் போது நான் செய்யும் மர பொம்மைகலுடன் விளையாடுவதை பாா்க்கும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
யாரும் இல்லாத தனிமையில் என் மனைவியுடன் நான் நினைக்கும் பழைய ஞாபகம் காணும்போது...
...எனக்கு கவிதை தொியாது...
இதை படிக்கும் நீ எந்ந கவிதையில்
எனக்கு கவிதை தொியாது
என்று நிற்கிறாய்...
உன் புன்னகையில் தொிந்தது...
...உனக்கு கவிதை புாிந்தது...
...எனக்கு கவிதை தொியாது... என்று

எழுதியவர் : லெகு (8-Jul-15, 12:29 am)
சேர்த்தது : ஹரவேல்
பார்வை : 93

மேலே