வேலை வாய்ப்பு தேடி

படித்து முடித்தான்
பட்டம் பெற்றான்,
விண்ணப்பித்தான் வேலைக்காக,
எங்கிருந்தும் வரவில்லை
வேலைக்கான 'ஓலை'.......
====================
தபால் காரன்
தடம் பார்த்து காத்திருந்தான்,
காத்திருப்பு மட்டுமே - அவன்
கையிருப்பு ஆகியது!
======================
வேலை வாய்ப்பு முகாம்
அவனுக்கு 'ஏய்ப்பாக' தெரிந்தது ,
நம்பிக்கை என்ற சொல்
அவனுக்கு எதிரியானது........
=====================
இன்று
அவன் நினைவலைகளில் 'ஆசிரியர்'
இன்னும் கூடுதல் மதிப்பெண்
பெற்றிருந்தால் வாய்ப்புகள்
நம்மை வலை வீசி கொண்டிருக்குமோ என்று...
=======================
அதிக முறை எழுதிய
அரசு தேர்வும் விதி
என்று சொல்லி விலகி ஓடியது,
சிபாரிசு என்ற வகையில் கொடுத்த
பணமும் 'வட்டி' என்ற கடனாளியாக்கியது ...........
=========================
இப்போது முடிவெடுத்துவிட்டான்
படிப்பு என்பது வேலை தேடி
அலைவது மட்டுமல்ல,
வேலை வாய்ப்பு அடுத்தவருக்கும்
உருவாக்குவதர்க்கும்தான்
========================
கல்வி வேலை என்றால் - உன்
கால்கள் வாய்ப்பு தேடி
அலைந்து கொண்டுதான் இருக்கும்!
கைத்தொழில் வேலை என்றால் -உன்
கைகள் தேடி விண்ணப்பம் வந்து கொண்டு இருக்கும்!
============================

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (8-Jul-15, 1:44 pm)
Tanglish : velai vaayppu thedi
பார்வை : 477

மேலே