அரசாட்சியாகும் கலவரங்கள் 555

சாதி,மதம்...

புறாக்கள் இரண்டு சாதியையும்
மதத்தையும் மறந்து...

காதலித்த புறாக்கள் இரண்டு
மணமாலை சூடியது...

வேடனின் அம்புபாய
பிரிந்தது புறாக்கள்...

ஒரு புறா பிரிந்து செல்ல மறுபுறா
கூண்டுக்குள் அடைபட்டது...

கூண்டின் வேதனை
தாங்காத புறா ஒன்று...

உயிரை மாய்த்து
கொண்டது...

சந்தர்பத்திற்காக காத்திருந்த
வேடர்கள் அடித்து கொண்டனர்
ஒருவரை ஒருவர்...

ஆரமித்ததோ கலவரம்
தடுத்து நிறுத்த யாரும் இல்லை...

மெளனமாக வேடிக்கை பார்த்தது
பெரிய வேடர்களின் கூட்டம்...

பிரிந்த புறாக்களை கண்டு சந்தோசம்
கொண்ட வேடர்களின் கூட்டம் எது...

துயரம் கொண்ட
வேடரின் கூட்டம் எது...

அப்பாவி புறாக்களின்
வீடுகள் தீயில் கருகியது...

சில புறாக்களின்
உயிரும் போயின...

இரு புறாக்களின் உயிரை பிரிக்க
அடித்த கொண்ட வேடர்களின்
சந்தோசம் இதில் உண்டோ...

வேடர்களின் மோதலில்
ஆதாயம் தேடி கொண்டவர்கள் யார்...

அரசனும் செவிசாய்க்காமல்
அரசாட்சியாக மாறிபோய்விட்டது...

வேடர்களின் கலவரங்கள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Jul-15, 6:11 pm)
பார்வை : 169

மேலே