மனிதனின் மதிப்பு உயர
1) தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
2) அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டுருப்பதை விடுங்கள்.
3) எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள்.
4) விட்டுக் கொடுங்கள்.
5) சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
6) நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
7) குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
8) உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
9) மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்.
10) அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.