அது எங்கு சென்றதோ - உதயா
அதிகாலை நேரத்தில்
மெதுவாய் இதமாய்
தென்றல் என் தலையை
தடவி விட
என் எண்ண அலைகள்
எங்கோ பறந்து சென்றது
என் கண்ணில் இருந்த
கண்ணீருக்கு விடுதலை
அளித்துவிட்டு ..!
வாழ்கை சக்கரத்தில்
ஓடி ஓடியே சக்கையாகிவிட்ட
சான்றோர்களும் .
நம் முன் இச்சமுதாயத்தை
ஆன்றோர்களும்
பல தாய் தந்தைகளும்
மூதோர் எனும்
பரந்த அரங்கில்
அனாதையெனும்
பிரமாண்ட மேடையில்
கண்ணீரும் கண்ணமும்
கொட்டும் இசை வானில்
கதறலேனும் மாபெரும்
கச்சேரியை அனுதினமும்
அரங்கேற்றிக் கொண்டிருந்தனர் ...!
அறுசுவை உணவோடும்
மூவுலகம் பரவும்
முக்கனி மணம் நிறைந்த
பழப் படையலோடும்
முக்கடல் முழுவதும்
மணக்கும் பாலோடும் ..
இருவேளை குளியலும்
படையளுமாய்...
அந்த அநாதை குழந்தைகள்
பசியால் துடித்து துடித்து
ஊமையாகி கலங்க கலங்க
அவர்களின் கண்முன்னே
முச்சந்தியில் அமர்ந்த
ஏதோ ஒரு நாமம் கொண்ட
கல்லுக்கு நாள்தோறும்
காணிக்கையாக்கப்பட்டிருந்தது ...!
உணவு
உடை
இருப்பிடம்
எளிதாக கிடைத்தும்
மலைகளில் ஏறியும்
கடல் அலைகளில் சரிக்கியும்
சாதனை படைப்போர் மத்தியில்
அவளுக்கு மட்டும்
அடுத்த வேளை உணவினை
தேடி தேடி அலைவதே
பெரும் சாதனையாக இருந்தது ...!
இங்கு
எதுவும் சரியில்லை ..!
இங்கு
எதையும் என்னால்
சரிசெய்ய முடியவில்லை ..!
என் போராட்டமும்
இன்னும் ஓயவில்லை ...!
அனைவரும்
எக்கவலையும் இன்றி
நிம்மதியாக உறங்குகிறார்கள் ..!
உறங்குங்கள் உங்கள் உறக்கம்
ஒருநாள் கலைக்கப் படும்
அப்போதாவது எழுவிர்களா ..?
இனி இரவு தோறும்
விடுதலைதான்
என் உறக்கத்திற்கு மட்டும் அல்ல
என் கண்ணீருக்கும் தான் ..!
என் இறுதி சொட்டு குருதியை
என்னுடல் இழக்கும் வரை
நான் நிச்சயம்
எதையாவது மாற்றி விடுவேன் ..!
இன்னும் என்னிடம்
வந்து சேரவில்லை
எங்கோ பறந்து சென்ற
என் எண்ண அலைகள் ..!
அது எங்கு சென்றதோ ..?

