மனிதன்

என்னடா மானிடா சொல்லடா ஏனடா
ஆரியன் யாரடா அவன் அன்னியன் தானடா
திராவிடம் ஏனடா நீ தரித்திரம் தானடா
சரித்திரம் படைத்தவன் தமிழன் தான் பாரடா
வெறி பிடித்து அலையும் நீ மனிதனா கூறடா ,,

வேதம் சொல்ல வந்தவன் விதைத்தென்ன மந்திரம்
ஜாதி என்ற பெயரை சொல்லி அவன்
பிரித்துவைத்த தந்திரம்
உன்னை பிடித்ததுடா தாித்திரம் ,,
அது காலம் என்ற காற்றில் கறைந்து போகும் வேலை
தேடி பிடித்து தீபம் ஏற்றும் அவனே தீண்டதகா மனிதன் ,,

என்ன குறை வைத்தான் எல்லோரையும்
நன்றாய் தானே படைத்தான்
உனக்குமட்டும் தனியாக என்ன எழுதிவைத்தான்
ஈரம் இல்லா மனமே மாறவில்லை உன் குணமே
உனை ஈன்ற தாயும் பெருமைபட்டால்
நீ இழிபிறப்பின் மகனே ,,

ஜாதி மதங்கள் ஏனோ சாக்கடை உன் வீடோ
உன் சாதனைகள் வேதம் சொல்லும்
ஏழைகளின் பாதம்பட்ட நீரோ ,,

ஏற்றத்தாழ்வு இருக்கும் இதை நல்ல உள்ளம் வேறுக்கும்
ஏழை இல்லா உலகம் அது பிள்ளை இல்லா இல்லம்
இன்று சிரிக்கும் மனிதன் நாளை சிரிப்பதில்லை
தாழ்த்தபட்ட மனிதன் இந்த உலகில் யாருமில்லை
தரம் தாழ்த்தநினைக்கும் மனிதனின்
தலைமுறைகள் வாழ்வதில்லை ,,

ஆறறிவு இருந்தும் அடிமைபட்டுகிடந்தும்
ஆணவத்தால் அழியிறியே நீ அறிந்ததென்ன மனிதனாய் ,,

சரித்திரங்கள் உனக்கிருக்கு சாதி மதங்கள் நீ கடந்து
சாதனைகள் படைக்கனும்
சோதிக்கின்ற இறைவன் கூட உன்னை கண்டு திகைக்கனும் ,,

ஆதிமுதல் அந்தம்வரை வாழ்பவன் தமிழனே
நீ வாழனும் மனிதனாய்
உனை வாழ்த்தனும் உலகமே ,,,,,,written by:raja

எழுதியவர் : ராஜா (12-Jul-15, 4:53 am)
Tanglish : manithan
பார்வை : 76

மேலே