அவள் என்னவள்

கிரஹாம் பெல்லிற்கு பொன்னாடை போர்த்தப்படுகிறது
அவள் உதடு தொலை பேசியில் அலை பாயும் போது,
பூமியும் மடிந்து போகிறது
அவள் பாதம் மண்ணில் படாத போது,
நிலாவும் பொறாமை கொள்கிறது
மனித நிலாவான அவளைக்கண்டு,
முத்துக்களும் சிற்பிக்குள் ஒளிந்து கொள்கிறது
அவள் முத்துப்பல் சிரிப்பை கண்டு,
பூக்களும் பூரித்து போகிறது
அவள் மென்மையை கண்டு,
பிரம்மனுக்கு கசையடிகள் கிடைக்கிறது
அவளை விண்ணுலகில் படைக்காததால்,
சந்தனமும் சங்கடப்படுகிறது
அவள் நிறத்தைக் கண்டு,
என்ன புண்ணியம் செய்தேன் முற்பிறவியில் அத்தகையவள் எனக்கு கிடைத்து விட்டாள்.

எழுதியவர் : தினேஷ்குமார் (13-Jul-15, 6:01 pm)
Tanglish : aval ennaval
பார்வை : 144

மேலே