என்னைவிட்டு பிரிந்த இதயம் 555

பிரியமானவளே...

தினம் மலரும் பூக்கள் பூசி
கொண்டன உன் வாசத்தை...

உன் குரலோடு பேசி
கொண்டது தென்றல் தினம்...

முத்தமிட்டு கொள்கிறது
நிலம் உன் பாதத்தை...

வெண்ணிலவு தினம்
தேடுகிறது உன் விலாசத்தை...

நான் தேடுகிறேனடி
தொலைத்த என் இதயத்தை...

கலைந்து போகும் என்று
கனவு கண்டு இருக்கிறேன்...

நீ என்னை பிரிந்து
செல்வாய் என்று...

நான்
காதலிக்கவில்லையடி உன்னை...

இன்று ஏனோ நீ
என்னைவிட்டு வெகுதூரத்தில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Jul-15, 6:17 pm)
பார்வை : 1411

மேலே