நீ செதுக்கிய கல்வெட்டுதானடி என் காதல் 555
உயிரே...
என் தனிமையின் விநாடிகளை
உணதாக்கியது உன் பார்வை...
உன் பார்வையை கொடுத்துவிட்டாய்
என் விழிகளுக்கு...
சிறை பட்டதடி
என் விழிகள் உன்னில்...
உன்னருகில் நான் வரும்
நேரமெல்லாம்...
நீ ஊமையாக மட்டுமே
உன் பார்வைகள் மட்டும் பேசுதடி...
என் நெஞ்சில் தினம் பார்வையாலே
பச்சை குத்தி செல்கிறாயடி...
பொக்கிஷமாக
சேமிகிறேனடி நான்...
உன் பார்வைகளை
ஒவ்வொன்றையும்...
என் நித்திரையில் உன்னை பற்றி
வரும் கனவுகளையும் சேமிகிறேனடி...
உன் கண்களால் என் இதயத்தில்
நீ செதுக்கிய கல்வெட்டுதாண்டி...
என் அழகிய காதல்...
உன்னை தினமும் என்னருகில்
காண நினைத்தேன்...
என் அன்பு மனைவியாக...
ஏனோ என் வாழ்க்கை நிலவு
மறைந்த இருண்ட வானமாக...
உன்னை மட்டும் நினைத்து
கொண்டு இருப்பதால்...
ஒவ்வொரு இரவும்
எனக்கு பௌர்னமிதானடி...
உன் நினைவில்.....