நானும் அவனும் -கண்ணீரும் புன்னகையுமாய்

என்னவனின் இதழோரம்
தவழும் புன்னகையாய்
வாழ நான் விரும்பினேன் ..........
என் விழியோரம்
வழிகின்ற கண்ணீராய்
வாழ அவன் விரும்பி
விலகி விட்டான் …..
பிரிவையும் சுகமாய் ஏற்றேன்
இன்று ,
அவன் புன்னைகையில் தவழ்வது
எனது கண்ணீராகவும் …..
எனது கண்ணீரில் வாழ்வது
அவனது புன்னகையாகவும் இருக்கட்டும் என்று …..

எழுதியவர் : பிரியா கி (13-Jul-15, 11:08 pm)
பார்வை : 245

மேலே