என்னவன் என்னுள் என்றும்

என்னவனின் பார்வை
என் விழிகளில் விடியும் ,
என்னவனின் வார்த்தை
என் நாவினில் பேசும் ,
என்னவனின் புன்னகை
என் இதழ்களில் தவழும் ,
என்னவனின் சுவாசம்
என் மூச்சினில் அடங்கும் ,
என்னவனின் கோபம்
என் ஊடலில் தீரும் ,
என்னவனின் துன்பம்
என் மடியினில் மறையும் ,
என்னவனின் இன்பம்
என் உயிரோடு வாழும் ,
என்னவனின் நினைவு
நான் இறந்தாலும்
என் மனதோடு வாழும்
அவனை ரசித்தபடியே ……..

எழுதியவர் : பிரியா கி (13-Jul-15, 11:28 pm)
பார்வை : 1826

மேலே