காத்திருக்கிறேன் என்னவனுக்காக
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவனை ஒரு சேயாய்
நேசிக்கிறேன் …
அவன் குழந்தைத்தன
சிரிப்பிற்காக ஏங்கினேன் ….,,,,,,,
அவனை அள்ளி எடுத்து
கொஞ்சவே வேண்டினேன் ……,,,,,,,,,,,
அவன் கண்களை
தீண்டி முத்தமிட தவித்தேன் …,,,,,,,,
அவன் மார்போடு தட்டிகொடுத்து
அவனை உறங்க வைக்க எண்ணினேன் ……..,,,,,,,,
அவன் பேசும்போது
மழலையின் இனிமையை அறிந்தேன் ..,,,,,,,,,,
அவன் உறங்கும்போது
நெற்றியில் தவழும்
முடியை தீண்டி
அவன் சிறுமுகத்தை
கண்டு ரசித்தபடியே
மறக்க எண்ணினேன்
அவனில்லாத இப்பிறவியை …….
காத்திருக்கிறேன் .,,,,
என்னவனுக்காக
இனி வரும் ஜென்மங்கள் எல்லாம்
நான் அவனோடு
என்ற நம்பிக்கையில் ………..