உச்சம்

(மூணாறின் மலை உச்சியில்..)
சித்தம் கலங்கிவிட
சிறுவிரல் துடிதுடிக்க....
நித்தம் உறைந்துபோனேன்
மிச்சமில்லா மொத்தமானேன்.....

காதல் வயப்பட கட்டிவைத்த
சத்திரமோ .......
செம்மழலை புன்னகையில் இட்டு வைத்த
சித்திரமோ...

தற்கொலைக்கு வருபவனையும் தன்மைறந்து
பார்க்கவைக்கும் .....
இயற்கையின் புகைப்படம்
அர்த்தம் இதுதானோ..

மெய்மறந்ததும் அன்றுதான்
மெய்சிலிர்த்ததும் அன்றுதான் ....

யார் அந்த மானுடன் உலக அழகியை தேர்ந்தெடுப்பவன் ..??
இங்குவந்து பார் எழுதுகோலை மூடிவிட்டு ...
என்ன மதிப்பெண் இடுகிறாய்
இந்த இயற்கை தாய்க்கு ..?

தென்னிந்திய உயரத்தில்
தேகம் சிலிர்த்துவிட ,
விறுவிறுப்பாய் நடந்தேறியது ஒரு
வெள்ளை கம்பள வரவேற்பு ....

ஆதவனை கண்டதும் சேர்த்துவைத்த
சிறுபனிகள் .....
சிதறியடித்து ஓடி ...சின்னச்சின்னதாய் அரங்கேறியது
ஒரு சிறு வெள்ளையனே வெளியேறு ...

நேரமானால் அபராதம் என்பதால் பிரியா விடைபெற்றேன்...
விழியோரம் தினம் தழுவும் அக்காட்சியை
மீண்டும் காண ஆவலுடன்....!!!

எழுதியவர் : Gugan (14-Jul-15, 5:44 pm)
பார்வை : 64

மேலே