தெய்வமடி
முத்தம் மட்டுமல்லடி
மகளே உன்
கிள்ளலும்,கடியும் கூட
தாய்க்கு மகிழ்ச்சியே!
சிறு விரல்களில் என்
சந்தோஷங்களையும்
மழலை மொழியில்
மோட்சத்தையும்
தத்தி தத்தி நடக்கும்
நடையில் வாழ்வோட்டத்தையும்
"அம்மா" என்ற
அங்கீகாரம் தந்த நீ
தெய்வமடி எனக்கு!

