கிராமத்து தேவதை

கத்தாழ ஓடையில ஒத்தையில
காத்திருந்தேன்....
நீ நிக்காம போகையில
நிக்குதுடி ஏன் உசுரு.....

வத்தாம ஓடுன ஓடையிது
இப்ப வறுமையில வாடுதடி..
உன் கால்தடம் பதியாம...

கள்ளிச் செடி சாஞ்சுருச்சு....
இந்த பாவி மனம்
காஞ்சுருச்சு....
அடி அரளி பூ வாசக்காரி..
எனக்கு பிடிச்ச பாசக்காரி....
பச்சநெல்லு குணத்துக்காரி...
... குறுத்துவாழ உதட்டுக்காரி....

கரிச்சான் காட்டுக்குள்ள கால் கடுக்க காத்திருக்கேன்...

மேக்கால போர ஊதகாத்து
தொடலயாடி ஓன் உசுர.....

_மஞ்சள் நிலா_

எழுதியவர் : நாகராஜன் நாகா ஸ்ரீ (15-Jul-15, 6:26 pm)
பார்வை : 435

மேலே