கைகோர்க்க வேண்டும் உன் கணவனாக 555

என் அன்பே...
என் தூக்கம்
கலைந்தது...
என்னை எழுப்பியதோ
உன் கொலுசு சத்தம்...
என் ஞாபகங்கள் எல்லாம்
உன் நிழல் பூத்து கிடக்கிறது...
நான் கனவு கலைந்து
எழுகையில்...
நம் காதலோ கைகோர்த்து
நடக்கிறது...
நான் உறங்கும்
ஒவ்வொரு இரவிலும்...
உன் புன்னகை வாசம்
வீசி போகிறது...
எப்படியோ எனக்குள் சுரந்து
கொண்டுதான் இருக்கிறது...
நம் காதல் நீர்
என் இதயத்தில்...
காதலியே உன் கை
கோர்க்க வேண்டுமடி நான்...
விரைவில்
உன் கணவனாக.....