அழகே உன்னை ஆராதிப்பேன்

சாலையின் நடுவே பேருந்து நிறுத்தம்
சுடிதார் பூக்களின் மாநாடோ.....
தேடிய திசையெல்லாம் தேவதைகள் கூட்டம் -
அதில் என் தாரகை மட்டும்
ரம்பையின் தோற்றம்

வெண்ணிற மேகத்தில் பொன்னிறம் கலந்த மேனியோ
வெயில் வந்து ஆசையாய் ஸ்பரிசித்து பார்த்திடுமே..

மின்னலை கோர்த்து நெய்த ஆடையோ
கண்களை மூடி திறக்க செய்யுதே..

பேசிடும் வார்த்தைகள் சர்க்கரை பொங்கலோ
யாசித்து நிற்கும் யட்சகன் நானோ

பேரழகி பல்வரிசை தாஜ்மஹால் கட்டிடமோ
ஏழை விவசாயி எனக்கு அது சொப்பனமோ..!

கூந்தலை மூடியது சிறு மல்லிகை தோட்டமோ
குத்தகைக்கு நான் கேட்டால் அது முறையாகுமோ?

கண்மை தீட்டிய இடத்தில் வானவில் வளைவோ
வர்ணஜாலங்கள் எல்லாம் என் காட்சிபிழையோ !!!


பேரழகை விஞ்சிடும் பெண்மையோ

ரகசியங்கள் நிறைந்த பெட்டகமோ

தூண்டிலில் சிக்காத விண்மீனோ

தூரிகை சிந்திடும் ஓவியமோ

கம்பன் கைபட எழுதிய காவியமோ

பல்லவ தேசத்து கற்சிலையோ

வான்விட்டத்தில் வசிக்கும் வெண்ணிலவோ

வற்றாது சுரக்கும் குற்றாலமோ..

எத்தனை எத்தனை கற்பனைகள்
என் கண்மனி உன்ணை நினைக்கையிலே
அத்தனையும் உன்னுடன் பகிந்துகொள்ள
காதல் உற்றதாய் நீ சொல்லி கேட்கையிலே

பத்தாது என்று நீ சொன்னாலோ
பக்கத்து மொழிகளில் கடன் கேட்பேன்
குறையாது என்றும் காதல் செய்து அழகே உன்னை ஆராதிப்பேன்
-NBR

எழுதியவர் : NBR (இராஜேந்திரன் புவன்) (15-Jul-15, 8:01 pm)
பார்வை : 143

மேலே