தொலைதூர நிலவே
என் கண்ணீர் துடைத்த
உன் விரல்களையும்..
என் உறக்கம் குடித்த
உன் மடியினையும்..
என் பாதை கடந்த
உன் பாதங்களையும்..
என் உயிர் சுமந்த
உன் உடலினையும்..
மொத்தமாக கொண்டு சென்று
தூரமாகவே நின்று கொன்று
நேரமின்றி நேசம் கொள்கின்றாய்..!
உன் பணிச் சுமையினால்
நான் பனிச் சுமையினைத்
தருகின்றேன் இரவுகளில் விழிக்கும்
கவிதைக் காகிதங்களுக்கு..!
நம் காதல்...
தொலைவுகளினால் என்றுமே
தொலைந்து விடாது என்
"தொலைதூர நிலவே"...
செ.மணி