பிரிவு

இளம்பருவத்தில் எத்தனையோ நாட்களை
இன்பமாக கழித்திருந்தேன்.
அப்போதெல்லாம் எனக்கு
கால நேரம் பற்றிய கவலை இருந்ததில்லை...!
எந்நேரமும் நண்பர்கள்
புடைசூழ வருடங்கள்
பலவற்றை
கல்லூரி வாசல்களிலும்,
மதில் சுவர்களிலும்,
இனிதாய்க் கழித்திருந்தேன்..!
காதல் வயப்பட்டு
உனக்கு நான்
பட்டயம் எழுதித் தராத
அடிமையாய் ஆனது முதல்
உனைக் காண காத்திருக்கும்
அந்த சில நிமிடங்கள் கூட
பல யுகங்களாய் மாறித் தருகின்றது
எனக்கு பிரிவுத் துயரத்தை....!