கதறுதய்யா நாற்க்காலி கதறுதய்யா

கதறுதய்யா... நாற்க்காலி கதறுதய்யா...!

பெருச்சாலித் தொல்லையால் கதறவில்லையய்யா அது....!

பெரும் ஊழல் பெருச்சாலிகளை சுமப்பதாலே கதறுதய்யா...!

அய்யகோ... என் வீட்டு நாற்க்காலி கதறவில்லை...!

தமிழகத்தின் கோட்டை நாற்க்காலி கதறுகிறதே...!

என் பொதுவுடைமை தாத்தா பெரியார் வெள்ளையடித்தக்கோட்டை...,

இரத்தக் கண்ணீர் வடிக்கிறதே...!

கல்விக்கு கண்கொடுத்த​ கர்மவீரர் கட்டிவைத்தக்கோட்டை சரிகிறதே....!

கல்வியைய் வியாபாரம் செய்கிறார்கள் கயவர்கள்...!

கல்லசாராயத்தை ஒழித்துவிட்டு நல்லசாராயம் விற்றுபிழைக்கிறது அரசு....!

ஆட்சிசெய்யத் தெரியாமல் தனியரிடம் அரசை விற்க்கவும் தயாராகிவிட்டார்கள்....!

விவசாயி தற்க்கொலைகளை பொழுதுபோக்கு என்று வர்னிக்கிறார்கள் பொறம்போக்கு நாய்கள்....!

தட்டிக்கேட்க​ நாதியற்றுப்போனதே என்று நாற்க்காலிதான் கதறுகிறது...!

தமிழக​ மடையர்கள் எவறும் கதறவில்லை....!

விழித்துக்கொண்டே தூங்கும் அறிவாலி தமிழர்களே....!

நீயாக​ விழிக்காவிடில் விடியல் என்பதே கிடையாது...,

விழித்தெழு தமிழா... உன் கோவனம் களவுபோகிறது..!

( அரசியல் ஊழலை அடித்து நொருக்குவோம்...,
தமிழக​ அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவருவோம்...!).

-சிறகு ரமேஷ்...!

எழுதியவர் : -சிறகு ரமேஷ் (16-Jul-15, 5:49 pm)
பார்வை : 244

மேலே